ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி

-O- ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரியில் 2012 - 2013 ஆம் ஆண்டிற்க்கான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது...மிகக்குறைந்த இடங்களே உள்ளன முந்துங்கள்... -O- பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 4 ,5 மற்றும் 6ஆம் வகுப்பு மாநில அளவிலான ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரம் ஒன்றிய வாரியாக 15.10.2012க்குள் இணை இயக்குனருக்கு EMAIL மூலம் அனுப்ப உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2012 - 4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி விவரங்கள் 29.10.2012க்குள் நேரடியாக சமர்பிக்க இயக்குனர் உத்தரவு. -O- தொடக்கக் கல்வி - தனியார் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பள்ளி பாதுகாப்பு மற்றும் நிரந்திர / தற்காலிக அங்கீகாரம் புதுபிக்கப்பட்ட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. -O- அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம் -O- செய்தித்துறைக்கு தனி இணைய தளம் துவக்கம் -O- ஊதிய முரண்பாடு களைதல் குழு அறிக்கை எப்போது? -O- ஆண், பெண் காவலர்கள் தேர்வு முடிவு -O- அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது -O- DSE - HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION WIIL BE HELD ON 15.10.2012 - PANEL RELEASED Powered By வீரமணி பெரியேரி

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். ‘உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?” ”வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?”- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.
அவரிடம் பேசினோம். ” கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.
பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.
ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in)
எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்” என்கிறார்.

—————————

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக